இன்று புனர்பூசம் : அனுகூலம்... மூலம் : சுபிட்சம்... அவிட்டம் : புத்துணர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மேஷம்:

கூட்டாளிகளின் செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகலாம்.  பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.

ரிஷபம்:

இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகஸ்தர்கள் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம். சிந்தையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.

மிதுனம்:

பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். மனதில் தோன்றும் தெளிவான சிந்தனைகளால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும்.புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.

கடகம்:

தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நீர் நிலை சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லைகளால் மனவருத்தங்கள் ஏற்படலாம்.  உடல் சோர்வால் எடுத்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும்.

சிம்மம்:

செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்ப பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி:

சமூக பணிகளில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்கவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனம் தொடர்பான பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும்.

துலாம்:

இசைக்கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சகம்:

உறவுகளிடம் அமைதிப்போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்று.

தனுசு:

உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத்திறமையால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் இழுபறியான நிலை உண்டாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும்.

மகரம்:

வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். பெற்றோர்களை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சிறு தடை, தாமதங்கள் நேரிடலாம். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.

கும்பம்:

மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். வாகன வசதி மேம்படும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடம் கவனத்துடன் செயல்படவும்.

மீனம்:

புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம். தொழில் சார்ந்த துறைகளில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dec 09 rasipalan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->