திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்: வைகுண்ட ஏகாசித் திருவிழா – டிசம்பர் 30-ல் சொர்க்கவாசல் திறப்பு! - Seithipunal
Seithipunal


108 வைணவத் திருத்தலங்களில் பழமையானதும், ஐந்து திவ்ய தேச எம்பெருமான்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கும் சிறப்புமிக்கதுமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், இந்த ஆண்டு வைகுண்ட ஏகாசித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

ஐந்து நிலைகளில் பெருமாள்:
இக்கோயிலில் பெருமாள் நின்ற கோலத்தில் வேங்கடகிருஷ்ணனாகவும், இருந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும், கிடந்த கோலத்தில் ஸ்ரீரங்கநாதராகவும் சேவை சாதிப்பது தனிச்சிறப்பு.

முக்கிய விழா விவரங்கள்:
பகல்பத்துத் தொடக்கம்: டிசம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. நாள்தோறும் பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளுவார்.

சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு: டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறும்.

தரிசன நேரம்: காலை 5.30 முதல் 10.30 மணி வரை பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

வீதி உலா: இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி, நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறும்.

இராப்பத்து மற்றும் நீராட்டு உற்சவம்:
டிசம்பர் 31 முதல் ஜனவரி 9-ம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடைபெறும். இதில் ஜனவரி 7-ம் தேதி வரை மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் சேவை உண்டு. மேலும், ஜனவரி 6 முதல் 14-ம் தேதி வரை ஆண்டாள் நீராட்டு உற்சவம் நடைபெறும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai parthasarathy temple Vaikunta Ekadasi


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->