பீஷ்மரை காத்திருக்க வைத்த புண்ணிய காலம்! - உத்தராயணம் நாளை தொடக்கம்...!
auspicious period that made Bhishma wait Uttarayana begins tomorrow
தமிழர் திருநாள் பொங்கலுடன், ஆன்மிக சிறப்புமிக்க உத்தராயண புண்ணிய காலம் நாளை தொடங்குகிறது.சூரியன் வடதிசை நோக்கி பயணம் தொடங்கும் இந்த நாள், தை மாதத்தின் முதல் நாளாகும்.‘உத்தராயணம்’ என்பது சூரியன் மிதுனத்திலிருந்து மகர ராசிக்குள் நுழையும் புனித தருணம்.
இதன் தொடக்கத்துடன், ஆறு மாதங்களுக்கு சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் ஆரம்பமாகிறது. இந்த காலத்தை சாஸ்திரங்கள் மங்களகரமான காலகட்டம் என வர்ணிக்கின்றன.தமிழ்நாட்டில் பொங்கலாகக் கொண்டாடப்படும் இந்த நாள், வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

உத்தராயணம் தொடங்கியவுடன் திருமணம், புதிய தொழில், வீடு, வாகன வாங்குதல் போன்ற சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தொடங்கும் என நம்பப்படுகிறது.உத்தராயணம் தேவர்களின் பகல் காலம் என்றும், இந்த காலத்தில் உயிர் பிரிந்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் பகவத்கீதையில் கூறப்பட்டதாக நம்பிக்கை உள்ளது.
அதனாலேயே மகாபாரதத்தில் பீஷ்மர், உத்தராயணம் வரும் வரை உயிர் துறக்காமல் காத்திருந்தார்.தை முதல் நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தல், சூரிய பகவானை பொங்கல் வைத்து வழிபடுதல் பலன் தரும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனிதர்களுக்கான 24 மணி நேரம் போல, தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடமே ஒரு நாள். அதில் ஆறு மாதம் பகல் – ஆறு மாதம் இரவு. அந்த தேவர்களின் பகல் காலமே இந்த உத்தராயண புண்ணிய காலம் ஆகும்.
English Summary
auspicious period that made Bhishma wait Uttarayana begins tomorrow