திருமலை பக்தர்கள் கவனத்திற்கு...! 2026 பிப்ரவரி தரிசன முன்பதிவு தினங்கள் அறிவிப்பு நாளை வெளியீடு...!
Attention Tirumala devotees Announcement February 2026 Darshan Booking Dates released tomorrow
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"2026 பிப்ரவரி மாதத்தில் ஏழுமலையான் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிட அறை முன்பதிவு செயல்முறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கோவிலின் முக்கிய ஆர்ஜித சேவைகள் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகள், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் ஆன்லைனில் கிடைக்கும்.இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான மின்னணு டிப் பதிவு 20ஆம் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.

20 முதல் 22ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.அதேபோல, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஸ்ரீவாரி சாலகட்ல தெப்போற்சவம் போன்ற சிறப்பு சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் அதே நாள் காலை 11 மணிக்கு, முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கன்கள் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.ரூ.300 கட்டணத்திலான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்படும்.
திருமலை-திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகளுக்கான அறை முன்பதிவுகள் 25ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கும்.பக்தர்கள் அனைத்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், தரிசன நுழைவு டிக்கெட்டுகள், மற்றும் தங்குமிட முன்பதிவுகள் அனைத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
English Summary
Attention Tirumala devotees Announcement February 2026 Darshan Booking Dates released tomorrow