தினம் ஒரு திருத்தலம்.. சிங்காரவேலவர் திருமேனியில் வியர்வைத்துளிகள்.. வெண்ணெய் நாதர்..!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில் :

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

கோயில் எங்கு உள்ளது :

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்னும் ஊரில் அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்புகள் :

இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக 'வெண்ணெய் நாதர்" என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்.

கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது.

இங்குள்ள சிங்காரவேலர் வேல் வாங்கி வீராவேசத்துடன் வரும் சமயத்தில் அவரின் திருமேனியில் வியர்வைத்துளிகள் உண்டாவதை சஷ்டி காலத்தில் பார்க்கலாம்.

அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு 'சத்ரு சம்ஹார திரி சதை" என்கின்ற அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.

சிவன், பெருமாள், முருகன் மற்றும் அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

வேறென்ன சிறப்பு :

இத்தல பெருமாள் 'கோலவாமனப்பெருமாள்" என்ற திருநாமத்துடன் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

இத்ததல விநாயகர், சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

கோயிலின் வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி உள்ளது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 146வது தேவாரத்தலம் ஆகும்.

அம்மனின் 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

திருவிழாக்கள் :

 சித்திரை பிரம்மோற்சவம், கந்தசஷ்டி ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனைகள் :

அனைத்து விதமான கஷ்டங்களும் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்கள் :

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் இத்தல இறைவனுக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arulmigu Marundheeshvarar temple


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->