இன்று ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திர காலம்..அக்னி நட்சத்திரம் என்றால் என்ன.? வாட்டி வதைப்பது ஏன்? - Seithipunal
Seithipunal


அக்னி நட்சத்திரம்...!!

ஜோதிடத்தில் இருக்கும் அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. ஆனால் எப்படி அக்னி நட்சத்திரம் என்ற ஒன்று வந்தது? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதியான சூரியனின் அதிதேவதை அக்னி. சித்திரை மாத பிற்பகுதி மற்றும் வைகாசி மாத முதல் 2 வாரங்கள் சூரியன் பயணிக்கும்போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் இது அக்னி நட்சத்திரம் என்று கூறப்படுகிறது.

ஜோதிடப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் பயணிப்பார். அந்த வகையில் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது சூரியன் உச்ச பலம் பெறுவதால், அதிக வெப்பம் காணப்படுகிறது. சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களின் பெயர்தான் அக்னி நட்சத்திரம் ஆகும்.

அதன்படி இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை (04.05.2022) முதல் தொடங்க உள்ளது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது.

சூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன்படி சூரியனின் அதி உச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்களை செய்ய வேண்டாம் என்று நமது ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

அக்னி நட்சத்திர காலம் வாட்டி வதைப்பது ஏன்?

அக்னி தேவன் தீராத வயிற்றுப் பசியால் அவஸ்தைப்பட்டு கொண்டிருந்தார். இவருக்கு ஏற்பட்ட பசிக்கு காரணம் தெரியாமல் தேவர்கள் திண்டாடினார்கள்.

இறுதியாக சுவேதகி என்ற மன்னன் 12 ஆண்டுகாலம் நடத்திய யாகத்தில் இட்டுக்கொண்டிருந்த நெய்தான் அக்னி தேவனின் வயிற்றில் பசியை உண்டாக்கிவிட்டது என்றும் அறிந்து கொண்டனர்.

அக்னி தேவனின் கோரமான பசி தீர வேண்டுமானால் ஒரு அடர்ந்த காட்டை விழுங்கியே ஆக வேண்டும். இதற்காக அக்னி தேவன், காண்டவ வனத்தை தேர்ந்தெடுத்தார்.

அங்கு வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் வருணனிடம் முறையிட்டன. அனைவரையும் காப்பாற்றுவதாக வருணன் உறுதிமொழி அளித்தார்.

இதனை அறிந்த அக்னி தேவன் கிருஷ்ணரிடம் சென்று காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறார் என முறையிட்டார்.

உடனே கிருஷ்ணர் அர்ஜூனனை பார்த்தார். பார்வையாலேயே புரிந்துகொண்ட அர்ச்சுனன், அம்புகளை சரமாரியாக எய்து காண்டவ வனத்தின் மீது கூடுபோல் கட்டினான்.

உடனே அக்னி தேவன் வனத்தை எரிக்க தொடங்கினான். அப்போது உனக்கு 21 நாட்கள்தான் அவகாசம் அதற்குள் வனத்தை அழித்து உன் பசியைத் தீர்த்துக்கொள் என்றார்.

அதன்படி காண்டவ வனம் எரிக்கப்பட்ட 21 நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் என்றும், கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agni Natchathiram starts today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->