ஜெயம் தரும் அபிஜித் முகூர்த்தம்.. நினைத்த காரியம் வெற்றி பெற இந்த நேரத்தில் செய்யுங்கள்.!! - Seithipunal
Seithipunal


நல்ல காரியங்களை செய்ய நல்ல நேரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒரு சில நேரங்களில் திதிகளும், நட்சத்திரங்களும், கிரகங்களும் சாதகமாக இல்லாத பட்சத்தில் ஒரு காரியத்தை (எதிர்காலம் சார்ந்த பணிகள்) செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன? என்பதை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

நமது முன்னோர்கள் சூரியன் உதயமாகும் பொழுதும், அஸ்தமிக்கும் நேரத்திலும், உச்சமாக இருக்கும் காலங்களிலும் நல்ல காரியங்களை செய்தால் நாம் எதிர்பார்த்த பலன்களை அடைய இயலும் என்பதை அறிந்து நமக்கு உரைத்து சென்றுள்ளனர்.

ஏனெனில் சூரியன் உதயமாகும் போதும், உச்சமாகும் போதும், அஸ்தமிக்கும் போதும் எந்தவிதமான திதி, நட்சத்திர, கிழமை தோஷங்கள் எதுவும் கிடையாது.

சூரியன் உச்சிகாலம் அடையும் நேரத்தினை அபிஜித் முகூர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த முகூர்த்தத்தில் செய்யப்படுகின்ற காரியங்கள் யாவும் ஜெயத்தை அளிக்கக்கூடியது.

சூரியன் உச்சமடையும் பொழுது மிகுந்த பிரகாசத்துடன் இருப்பதால் நாம் செய்யும் காரியங்களும் சூரியனை போல் பிரகாசமாக இருக்கும்.

பிரம்ம முகூர்த்தத்திற்கு நிகரான பலனை அபிஜித் முகூர்த்தமும், கோதூளி முகூர்த்தமும் தரவல்லது. இந்த முகூர்த்தங்களுக்கு எந்தவிதமாக தோஷங்களும் கிடையாது.

அபிஜித் முகூர்த்த காலம் என்பது உச்சி காலமான பகல் பொழுதாக இருக்கக்கூடிய 11.45 முதல் 12.15 மணி வரை உள்ள முகூர்த்தம் ஆகும்.

அபிஜித் முகூர்த்தம் என்பது வெற்றியை தரக்கூடிய முகூர்த்தம் ஆகும். அபிஜித் முகூர்த்தத்திற்கு நட்சத்திர, யோக, கரண மற்றும் பஞ்சாங்க தோஷங்கள் என்பது எதுவும் கிடையாது.

இந்த அபிஜித் முகூர்த்தத்தில்,

திருமண சார்ந்த பணிகளை மேற்கொள்ளுதல்

புதிய வாகனம் வாங்க அல்லது பதிவு செய்தல்

புதியதாக பொன், ஆபரணங்கள் வாங்குதல் அல்லது செய்தல்

மனை தொடர்பான பத்திர பதிவுகளை மேற்கொள்ளுதல்

உத்தியோகத்தில் உள்ள உயர் அதிகாரிகளை சந்தித்தல்

அரசு தொடர்பான உதவிகள் மற்றும் பணிகளை மேற்கொள்ளுதல்

ஆரோக்கியம் சார்ந்து மருத்துவம் பார்க்க செல்லுதல்

அடுக்குமாடி கட்டிடம் தொடர்பான பணிகள் துவங்க மற்றும் திட்டமிடுதல்

நீண்டகாலம் நன்மை தரக்கூடிய எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

abhijit muhurtham 2020


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->