"ஆடிப் பூரம்".. வழிபாட்டின் பலன்கள் என்ன..? யாரெல்லாம் அன்று வழிபட வேண்டும்..? என்று தெரியுமா..?! - Seithipunal
Seithipunal



ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் என்று அனைவருக்கும் தெரியும். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளுமே மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் வரும் தினமான ஆடிப் பூரம் மிக மிக விசேஷமான நாளாகும். 

ஜோதிட ரீதியில் 27 நட்சத்திரங்களில் 11வது நட்சத்திரமாக இருக்கும் பூரம் நட்சத்திரம் ஆடி மாதத்தில் வரும் நாளில் தான் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். மேலும் அந்த ஆடிப் பூர நாளில் தான் அம்பிகை தோன்றியதாக புராணங்களும் கூறுகின்றன. 

மேலும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான, மகாலட்சுமியின் அவதாரமான ஆண்டாளும் ஆடிப் பூரத்தில் தான் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அம்மனின் சக்தி அதிகரித்துக் காணப்படும் இந்த ஆடி மாதத்தில் தான் பார்வதி தேவியும் அவதரித்தார். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஆடிப் பூர நாளில் தான் பராசக்திக்கு வளைகாப்பு நடத்தப்படும்.

அன்று கோவில்களில் வழங்கப்படும் கண்ணாடி வளையல்களை பெண்கள் வாங்கி அணிந்து கொண்டால் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

இந்த ஆண்டு ஆடிப் பூரம்  ஆகஸ்ட் 7 புதன்கிழமை வருகிறது. எனவே அன்று அம்மனுக்கு வளையல், மஞ்சள் மற்றும் குங்குமம் வாங்கி கொடுப்பதன் மூலம் திருமணம் ஆகாதவர்களும், குழந்தை பேறு வேண்டுபவர்களும் அம்பிகையை வழிபட்டு வேண்டிய வரத்தைப் பெறலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aadi Pooram Pooja Methods and Benefits


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->