இந்த 5 ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கைகூடபோகிறது.. குருபெயர்ச்சி பலன்கள் 2022..! - Seithipunal
Seithipunal


குருபகவானின் அதிசார பெயர்ச்சி 2022ஆம் ஆண்டு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பொதுவாக குருபகவான் ஓரிரு மாதங்கள் அதிசாரமாக தான் இருக்கும் ராசியிலிருந்து, அடுத்த ராசிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை வரும் ஏப்ரல் 13ஆம் தேதி குரு, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார்.

2022 ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 2023 ஏப்ரல் 22ஆம் தேதி வரை மீனத்தில் இருப்பார். அதன்பின்னர் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவார். அதனால் இதனை குரு அதிசார பெயர்ச்சி என கூறுவதற்கு பதிலாக, குருபெயர்ச்சி என்றே கூறும் அளவில் நீண்ட காலம் மீனத்தில் குரு சஞ்சரிக்க உள்ளார்.

குருபகவான் :

அதிர்ஷ்டத்தை கொடுப்பவர் குரு. இவர் பார்வை பட்ட இடம், பார்வை பட்ட கிரகங்கள் நன்மையே செய்யும். மனித உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் ஒழுங்குப்படுத்தி சீராக இயங்க செய்பவர் குரு ஆவார். சுப கிரக வரிசையில் முதலிடம் பெறுபவர். ஜோதிடத்தில் குரு என்றாலும், வியாழன் என்றாலும் ஒன்று தான். ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார்.

குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படி பெயர்ச்சி அடையும்போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதமடைந்து நன்மைகள் நடைபெறும் என்பது ஜோதிட சாஸ்திரம்.

குருபகவான், தான் நின்ற (ராசி) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9வது ராசியையும் பார்ப்பார் மற்றும் 7வது ராசியை நேர்ப்பார்வையாக பார்ப்பார்.

எனவேதான், திருமணத்தில் குருபலன் வந்துவிட்டதா? என அறிந்த பின் திருமண முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

பொதுவாக குருபெயர்ச்சி என்றாலே அனைவரும் ஜோதிடரிடம் சென்று என் ராசிக்கு திருமணம் நடக்குமா? என்று கேட்கிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில், குரு ஜாதகருடைய ராசியிலிருந்து 2, 5, 7, 9, 12 போன்ற இடங்களை தனது பார்வையால் பார்க்கும்போது குருபலன் வருகிறது.

ஒருவருக்கு திருமணம் நடைபெற குருபலன் என்பது மிகவும் இன்றியமையாததாகும். நடக்கவிருக்கும் குருபெயர்ச்சியால் எந்த ராசிக்கு குருபலன் இருக்கிறது? என்று பார்ப்போம்...

திருமண யோகம் பெறும் ராசிக்காரர்கள் :

மிதுனம்

கடகம்

துலாம்

தனுசு

மகரம்

குருபெயர்ச்சியில் ஏற்படும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப குருபகவான் அளிப்பார். அதாவது திசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால் அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 zodiacs get married soon Guru peyarchi palankal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->