இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.. இன்றைய (30-08-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமும், லாபமும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

ரிஷபம்

மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வாழ்வு நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகளை குறைத்து கொள்வதன் மூலம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

சிம்மம்

அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

கன்னி

வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.

துலாம்

உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். கால்நடை சார்ந்த விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்

பிள்ளைகளின் மூலம் மதிப்பு மேம்படும். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆசைகள் அதிகரிக்கும் நாள்.

தனுசு

செய்தொழிலில் சில மாற்றத்தை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். எதையும் சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை உண்டாகும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.  மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம்

தந்தைவழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

கும்பம்

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். மற்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல் அமையும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவி காலதாமதமாக கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

30.08.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->