இன்றைய தினப்பலன்கள்... யாருக்கு வரவு? யாருக்கு மகிழ்ச்சி? யாருக்கு நன்மை? - Seithipunal
Seithipunal


மேஷம்:

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தவறிப்போன சில  பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும். புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

ரிஷபம்:

உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். நீண்ட கால கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். போட்டி தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கடகம்:

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். இலக்குகள் பிறக்கும் நாள்.

சிம்மம்:

முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை பற்றி அறிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

கன்னி:

உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். தன, தான்ய விருத்திக்கான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்:

வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். வாகனப் பயணங்களின் போது விவேகம் அவசியம். திறமை வெளிப்படும் நாள்.

விருச்சிகம்:

ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். வரவு நிறைந்த நாள்.

தனுசு:

பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய வேலை மற்றும் அதை சார்ந்த முயற்சிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

மகரம்:

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாக்கு சாதுரியத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

கும்பம்:

நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

மீனம்:

மனதில் தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவும். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சில முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். பேச்சுக்களில் கவனம் வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 jan rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->