இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையப்போகிறது.. இன்றைய (12-06-2022) ராசி பலன்கள் - Seithipunal
Seithipunal


மேஷம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கொண்டு முடிவு எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தெளிவு பிறக்கும் நாள்.

ரிஷபம்

எதையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை மேம்படும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சமூக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் தடைகளை மீறி எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மதிப்பு மேம்படும் நாள்.

மிதுனம்

தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

கடகம்

சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

சிம்மம்

பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளும், அதற்கான பயணங்களும் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.

கன்னி

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சொத்துச்சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். நண்பர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணியில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். திருப்தி நிறைந்த நாள்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். பொறுப்பறிந்து செயல்படுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தேவைகளை நிறைவேற்றும் நாள்.

தனுசு

விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது மேன்மையை உருவாக்கும். உத்தியோக பணிகளில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சாதகமான நாள்.

மகரம்

திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

கும்பம்

குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

மீனம்

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். ஆசைகள் பிறக்கும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12.06.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->