இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.. இன்றைய (12-09-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்களும், ஆதரவான வாய்ப்புகளும் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மதிப்பு மேம்படும் நாள்.

ரிஷபம்

பெரியோர்களின் ஆலோசனைகள் குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.

மிதுனம்

புதிய ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்

சிறு தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விருப்பம் நிறைவேறும் நாள்.

சிம்மம்

விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.

கன்னி

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தந்தைவழி தொழிலில் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். தெளிவு நிறைந்த நாள்.

துலாம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சலனம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். தடைகள் குறையும் நாள்.

தனுசு

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். எதிர்பார்த்திருந்த வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவுபெறும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். வசதிகள் மேம்படும் நாள்.

மகரம்

புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான சூழல் அமையும். சொத்துக்கள் தொடர்பான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். காதில் அணியும் ஆபரணங்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.

கும்பம்

வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நிறைவான நாள்.

மீனம்

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். குழப்பம் நீங்கும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 .09.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->