இன்றைய (09-05-2022) ராசி பலன்கள்.. இன்றைய தினம் யாருக்கு வெற்றி..? யாருக்கு மகிழ்ச்சி.? - Seithipunal
Seithipunal


மேஷம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவி தாமதமாக கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். தொழிலில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். மேன்மையான நாள்.

மிதுனம்

எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.  புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன பயணங்களால் லாபம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்கள் உதவியாக செயல்படுவார்கள். நேர்மை வெளிப்படும் நாள்.

கடகம்

எதிர்பாராத பயணங்களின் மூலம் சேமிப்பு குறையும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். லாபகரமான நாள்.

சிம்மம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும்.  உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மூலம் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

கன்னி

வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் குறையும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றம் செய்வதன் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

துலாம்

நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். போட்டி நிறைந்த நாள்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் குழப்பமும், காலதாமதமும் ஏற்படும். வெளிவட்டாரங்களில் பொறுமையை கையாளுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.

கும்பம்

மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள்.

மீனம்

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகளும், சிந்தனைகளும் உண்டாகும். அன்பு மேம்படும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

09.05.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->