தினம் தினம் திருநாளே... இன்றைய தினம் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும்? - Seithipunal
Seithipunal


மேஷம் :

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட சஞ்சலங்கள் குறையும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

ரிஷபம்:

புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். அமைதி நிறைந்த நாள்.

மிதுனம்:

திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கடகம்:

நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். விருத்தி நிறைந்த நாள்.

சிம்மம்:

சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றமும், புதுவிதமான அனுபவமும் கிடைக்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.

கன்னி:

காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. கவலைகள் குறையும் நாள்.

துலாம்:

வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதயகரமான சூழல் அமையும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு கிடைக்கும். உழைப்பு மேம்படும் நாள்.

விருச்சிகம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். களிப்பு நிறைந்த நாள்.

தனுசு:

உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சிக்கல்கள் குறையும் நாள்.

மகரம்:

முக்கியமான முடிவுகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கற்றலில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வீட்டில் மனதிற்கு பிடித்தவாறு சில மாற்றங்களை செய்வீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

கும்பம்:

உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் உண்டாக்கும். லாபம் நிறைந்த நாள்.

மீனம்:

உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விருப்பம் நிறைவேறும் நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

07 jun 2022 rasipalan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->