ஊறவைத்து சாப்பிட்டால் தான் சக்தி இரட்டிப்பு...! - தானியங்கள்,நட்ஸின் யாரும் சொல்லாத நன்மைகள்...!
Soaking and eating them doubles energy untold benefits grains and nuts
உணவில் சேர்க்கப்படும் குயினோவா, தினை போன்ற முழுத் தானியங்களை நேரடியாக சமைத்து சாப்பிடுவதற்குப் பதிலாக, சில மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துவது மிகவும் நல்லது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறு ஊறவைத்தால் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பு (anti-nutrients) தன்மைகள் குறைந்து, உடல் அவற்றின் சத்துகளை எளிதில் உறிஞ்சிக் கொள்ள முடியும். மேலும் தானியங்கள் மென்மையாகி, ஜீரணிக்க சுலபமாக மாறுகின்றன.

முழுத் தானியங்களை எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதால் அதன் இயல்பான சத்துக்கள் குறையும். அதேபோல், ஊறவைக்காமல் சாப்பிட்டால் செரிமான சிக்கல்கள், வயிற்றுப்புணர்ச்சி போன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
எனவே ஊறவைத்தே சமைத்து சாப்பிடுவது சிறந்த வழிமுறை.அதேபோல் நட்ஸ் மற்றும் விதைகள் பாதாம், கொட்டைகள், விதைகள் போன்றவற்றையும் ஊறவைத்தால் அவற்றில் இருக்கும் பைடிக் அமிலம் குறைந்து, நொதிகள் செயல்பட்டு சத்துக்கள் உடலுக்கு விரைவாக கிடைக்க உதவுகிறது.
ஊறவைத்த பாதாம் மற்றும் விதைகள், கச்சையாக சாப்பிடுவதைக் காட்டிலும் மென்மையாகவும், ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும். எனவே தினசரி உணவில் நட்ஸ் மற்றும் விதைகளை ஊறவைத்து சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு கூடுதல் பலன்களை அளிக்கும்.
English Summary
Soaking and eating them doubles energy untold benefits grains and nuts