வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பர் கூட்டத்தை அடையாளப்படுத்து - ட்ரெண்டிங்கில் #StopHatredAgainstVanniyars..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயமாக இருந்து வரும் வன்னியர் சமூகம் மீது பல போலி குற்றசாட்டுகள் சுமத்தப்படுவதும், பின்னர் விசாரணையில் உண்மை தெரிந்த பின்னர் வன்னியர் சமூகம் மீது குற்றம் சுமத்தியவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாகியுள்ளது. 

போலியான புரட்சிகளை பேசி, போலி சமத்துவம் பேசி தமிழகத்தில் மிகப்பெரிய வன்முறை தூண்டுகோலாக இருக்கும் சில மூடர்களை வெளிஉலகிற்கு அடையாளம் காண்பிக்கும் பொருட்டு வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் ட்விட்டரில் அடையாளப்படுத்தி வருவது தொடர்பான ட்விட் பதிவுகள் வைரலாகி வருகிறது. 

இது குறித்த பதிவுகளில், " கொரோனா தாக்குதல் ஒரு மிகப்பெரிய பேரழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆபத்தினை ஓரிரு மாதங்களில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் முறியடித்து விடலாம்.  

ஆனால், மக்கள் சமூகங்கள் மீது வீசப்படும் வெறுப்பு பேரழிவு இன்னும் பலப்பல தலைமுறைகள் காலத்திற்கு நம்மை பாதிக்கும். வன்னியர்கள் மீதும் பாமக மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், பிறகு அது அப்பட்டமான பொய் என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனை கண்டுகொள்ளாமல், அடுத்து வேறொரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துவதும் தமிழ்நாட்டின் வெறுப்பர் கூட்டத்தின் வழக்கமாக உள்ளது.

இந்த இழிவான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரக்கோணம் விவகாரத்தில் வன்னியர்கள் மீதும் பாமக மீதும் குற்றம் சுமத்தியவர்கள் மீது (1) அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும், (2) அவர்கள் செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று வன்னியர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு விஷயங்களை மேற்கோள்கண்பித்து வன்னியர் சமூகத்தினர் #StopHatredAgainstVanniyars என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanniyar Peoples Twitter Trending about StopHatredAgainstVanniyars Hashtag on twitter 27 April 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->