அந்த நாட்களில் ஊதியத்துடன் விடுமுறை?.. மாதவிடாய் விடுமுறை கேட்டு பெண்கள் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


பெண்கள் பருவமடைந்த பின்னர் மாதம் தோறும் 28 நாட்கள் சுழற்சி முறையில் சினைப்பையில் கருமுட்டை முதிர்ச்சியடைந்து சினைக்குழாய்க்கு வருகை தரும். இதில் இரண்டு சினைப்பைகள் இருக்கும் பட்சத்தில், மாதம் ஒரு சினைப்பையில் இருந்து மட்டுமே ஒரு கருமுட்டை வெளியாகும். பின்னர் மறுமாதம் மற்றொரு சினைப்பையில் கருமுட்டை வெளியாகும். கருமுட்டை கருப்பையில் இருந்து வெளியேறி ஆணின் விந்துடன் இணைந்த பின்னர் குழந்தையை உருவாக்குகிறது. 

கருவுடைய வளர்ச்சிக்கு கருப்பை உட்புறத்தில் இரத்த நாளம் மெல்லிய உள்ளுறை மாதம் தோறும் உருவாகிறது. கருமுட்டைகள் கருவுறாத நேரத்தில், கருப்பையில் இருக்கும் இரத்த நாளங்கள் உள்ளுறை சிதைந்து கருப்பை வாயின் வழியாக வெளியேறுகிறது. இந்த நிகழ்வையே நாம் உத்திரப்போக்கு அல்லது மாதவிடாய் என்று அழைக்கிறோம். பெண் தனது இளம்வயதில் முதன் முதலாக உதிரப்போக்கை எதிர்கொள்ளும் நாளையே பருவமடைந்த நாளாக நாம் சிறப்பிக்கிறோம். இதனை பூப்பெய்தல், பருவமடைதல், வயதிற்கு வருதல் என்றும் அழைக்கிறோம். 

சுமார் 10 வயது முதல் 16 வயதிற்குள் அனைத்து பெண்களும் பருமடைந்து விடுகின்றனர். பெண்ணொருவர் 18 வயதையும் கடந்து பருவமடையாமல் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை சந்திப்பது நல்லது. இதனைப்போன்று மாதவிடாய் நேரத்தில் இரத்தப்போக்கு மூன்று முதல் ஆறு நாட்கள் வரை நடைபெறும் நிலையில், இந்த நாட்களின் எண்ணிக்கை அதிகளவு இருந்தாலும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை அல்லது சிகிச்சை பெற வேண்டும். இன்றுள்ள காலத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் பணியாற்ற வேண்டிய சூழல் அல்லது பிற இடங்களுக்கு சென்றுவரவேண்டிய நிலை உள்ளதால் கைப்பையில் நாப்கினை எடுத்து செல்வது நல்லது.

இன்றுள்ள காலத்தின் கட்டாயத்தால் பெண்கள் வார விடுமுறை நாட்கள் கூட இல்லாமல் பல்வேறு சூழ்நிலைகளுக்காக தினமும் பணிகளுக்கு சென்று வரும் நிலையில், அவர்களுக்கு அந்த நாட்களில் குறைந்தபட்சம் 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் உண்மையான பல சமூக, பெண்ணிய ஆர்வலர்கள் குரல் உயர்த்தி வருகின்றனர். மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியையும், உடல் உபாதையையும் கருத்தில் கொள்ளாமல் சுயஇலாபம் அடையும் பல நிறுவனங்கள் கணநேர இடைவெளியை கூட வழங்காமல் பணி செய்ய வைக்கிறது. 

அரசு மற்றும் தனியார்துறைகளில் இன்று இந்திய அளவில் மட்டும் கோடிக்கணக்கான பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு மாதவிடாய் நாட்களில் குறைந்தபட்சம் 2 நாட்கள் விடுமுறை வழங்க அரசு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ட்விட்டரில் #PeriodLeave என்ற ஹாஷ்டேக்கையும் பலர் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். பெண்களின் உரிமைக்காக போராடுகிறோம் என உடல்நலத்தையும், மனநலத்தையும் சீரழிக்கும் பல பெண்ணிய ஆர்வலர்கள் என்ற போலிபுரட்சி மனநோயாளிகள் மாதவிடாய் நாட்களில் விடுமுறை கேட்டு அறிக்கை கூட விடவில்லை என்பதே நிதர்சனம். 

பெண்கள் எதையும் தாங்கும் சக்தி, அவர்களுக்கு அதெல்லாம் தேவைப்படாது என்பவர்களுக்கு ஒரேயொரு விளக்கமாக ட்விட்டரில் ஒரு பெண்மணி பதில் தெரிவித்து இருந்தார். அந்த பதிவில், " நீங்கள் ஒருநாள் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற உடல் உபாதை ஏற்பட்டால் பலசாலியாக நீங்கள் பணியை செய்து வந்தாலும், அந்த 2 நாட்கள் குட்டிபோட்ட பூனை போல உறங்குகிறீர்கள். ஒரு பொருளை கூட எடுத்து வைக்க முடியாதது போல, குவளை தண்ணீர் தங்களை எழுப்பி வாயில் கொடுக்கவேண்டியுள்ளது. சிலர் காய்ச்சல் வந்தாலும் சில பணிகளை தங்களால் இயன்றதை செய்வார்கள். அது ஒவ்வொரு நபருக்கும் மாறும். அதனைப்போலத்தான் அனைத்துமே. 

நாங்கள் எதையும் தாங்கும் சக்திதான். இடம், பொருள், ஏவல் என்பது நமது முதுமொழிகள். நாங்கள் கேட்கும் விடுமுறை சில பெண்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களது உடலில் அந்த சக்தி இருந்தாலும், அவர்களுக்கும் வலி ஏற்படும் என்பதே நிதர்சனம். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களின் வலிகள் விவரிக்க இயலாத துயரங்கள் தான். உண்மையில் ஒரு பெண்ணின் மீது தாய், சகோதரி, சொந்தம், நட்பு என அக்கறை இருந்தால், நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, முறையற்ற விமர்சனங்களை தெரிவிக்காமல் செல்லுங்கள், நாங்கள் நாங்களே., நீங்கள் நீங்களே. மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை கேட்டு பெற்றது தொழிலாளர் உரிமை என்றால், இதுவும் எங்களின் உரிமையே " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter trending about Periods Leave Woman want Leave At least 2 Days with salary


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal