அடக் கொடுமையே.. இனி இதற்கும் கட்டணம்.. அடுத்த குண்டை தூக்கிப் போட்ட எலான் மஸ்க்.! - Seithipunal
Seithipunal


உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை தன்வயப்படுத்தினார்.அதன் பின்னர் ட்விட்டர் நிறுவனத்தில், பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். 

அதில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இந்தக் குறியீட்டின் மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் கட்டணம் வசூலிப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக இனி டிவிட்டரில் செய்திக் கட்டுரைகளை வாசிக்கவும் பயணாளர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க உள்ளார் எலான் மஸ்க். இந்த புதிய நடைமுறையை அடுத்த மாதம் முதல் கொண்டு வர போவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பயனாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twitter May charges For reading Article Soon


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->