ஹாப்பி நியூஸ்... டுவிட்டரில் வருகிறது ஆடியோ கால், வீடியோ கால் வசதி..! எலான் மஸ்க் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டரை வாங்கினார். இதைத்தொடர்ந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதில் சமீபத்தில், டுவிட்டர் லோகோவான, நீலநிற குருவியை மாற்றி, ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபு என்ற நாயின் புகைப்படத்தை லோகோவாக வைத்தார்.

இதையடுத்து அந்த லோகோவை மாற்றி மீண்டும் நீலநிற குருவியே லோகோவாக வைக்கப்பட்டது. இந்நிலையில், டுவிட்டரில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் எலான் மஸ்க், டுவிட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது டுவிட்டர் பயனாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்றும் தற்பொழுது எலான் மஸ்க் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter comes with video calling and audio calling facility


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?




Seithipunal