பிரபலங்களே உஷார்.. யூட்யூப் முதல் இன்ஸ்ட்டாகிராம் வரை மத்திய அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் போலவே சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று எல்லா தரப்பு மக்களுமே பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை தங்களது அன்றாட பயன்பாடுகளில் பயன்படுத்தி வருவது இன்றியமையாததாகிவிட்டது.

இந்த சமூக வலைதளங்களில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்களை ஏராளமான மக்கள் பின்தொடர்கின்றனர். இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. மேலும், இவர்கள் சமூக வலைதளங்களின் மூலம் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கமும் அதிகமாக இருக்கிறது.

இதன் காரணமாக, சமூகத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. இதனைத் தொடர்ந்து மக்கள் மற்றும் சமூகத்தின் நன்மைக்காக இவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வெளியிட்டு இருக்கிறது.

அந்த நெறி காட்டுதல் வழிமுறைகளின் படி பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலமாக ஒரு பொருளையோ அல்லது சேவையையோ ஆதரித்து பேசும் போது பார்வையாளர்கள் வழி தவறி சென்று விடாமல் இருக்கும் வகையில் உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை கடைபிடிக்கவும் அந்த நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The central government has issued guidelines to be followed by social media celebrities and influencers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->