டேய் கார்த்தி..., அன்று கார்த்தியை தேடி அலைந்த திவ்யாவின் தற்போதைய பரிதாப நிலை.!! - Seithipunal
Seithipunal


டிக் டாக் செயலி பலரின் குடியைக் கெடுத்து வந்த நிலையில், இதனால் காதல் ரீதியில் அரங்கேறிய சம்பவங்களும் பல இருக்கிறது. அந்த வகையில், டிக்டாக்கில் தனது சமுதாயத்தின் பெயரை அடையாளமாக வைத்து, வீரமாக சுற்றித்திரிந்த தஞ்சாவூர் பெண்மணி திவ்யா. 

இவரை கார்த்திக் என்பவர் காதல் வலையில் விழ செய்த நிலையில், காதல் மன்னன் கார்த்திக் ஒரு சமயத்திற்கு மேல் கை விட்டு சென்றதால், ஊர் ஊராக தனது காதலனை தேடி திவ்யா சுற்றிவர தொடங்கினார். ஊரடங்கு சமயத்திலும், ஊரடங்கிற்கு முன்னதாகவும் தனது காதலனை தேடி கால்கடுக்க பேருந்துக்காக காத்திருந்து, பல ஊர்களுக்குச் சென்று காதல் போராட்டம் நடத்தி கார்த்தியை தேடி வந்தார்.

இவருக்கு பல ரசிகர்களும், எதிர்ப்பாளர்களும் இருந்து வருகின்றனர். காதலன் கார்த்தியை தேடுவதாக பல சம்பவங்களை நடத்தி முடித்த நிலையில், டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் டிக் டாக் போல உள்ள இந்திய தயாரிப்பு விஷ செயலியில் அறிமுகமான சகோதரர்களுக்கு ஆதரவாக நாகலாபுரம் பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவர் குறித்து ஆபாசமாக பேசிய வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக சுகந்தி தரப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, திவ்யா காவல் துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது அலைபேசியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்த நிலையில், தன்னை யூடியூப் சேனலுக்கு பேட்டி எடுப்பதாக கூறி, சுகந்தி ஆள் வைத்து கடத்திச் சென்று தாக்கியதாகவும் மற்றொரு புகாரை திவ்யா காவல் நிலையத்தில் அளித்துள்ளார். மேலும், தனது அலைபேசியை திருப்பித் தருமாறு காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தியுள்ளார்.

காதலனைத் தேடி அலைந்த கிளி, தற்போது அலைபேசியும் பறிகொடுத்து காவல்நிலையத்தில் இலவுகாத்த கிளியாக காத்திருக்கிறது அந்த தஞ்சாவூர் பூங்குயில்... என்றுதான் செயலியின் மாய உலகில் இருந்து இந்த கிளியை போல பலரும் வெளியே வருவார்கள்? என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur TicTok Famous Kallachi Dhivya Mobile Phone in Police Station


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal