திமுகவில் அடுத்த விக்கெட் விழுவதற்குள் அறிவிப்பு.! அவசர ஆலோசனை கூட்டத்தால் அறிவாலயத்தில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியில் இணையபோகும் நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திடீர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.

சிறிது நாட்களாகவே, திமுகவின் முக்கிய புள்ளிகள் பலரும் பாஜகவில் இணைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இன்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அறிவாலய வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் விரும்பி கேட்ட பதவி திமுகவில் தரப்படாத விரக்தியில் கு.க. செல்வம் கட்சியை விட்டு விலகுவதாக கூறப்படுகிறது. 

இருப்பினும், அதே நேரத்தில் திமுகவில் குறிப்பிட்ட சிலரே தொடர்சியாக பெரிய அளவிலான பதவிகளை தக்கவைத்து கொள்வதாக கு.க.செல்வம் ஆதரவாளர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் துரைமுருகன் ஆகியோர் பங்குபெறும் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டமானது தொடர்ந்து கட்சியை விட்டு திமுகவினர் வெளியேறும் செயல்களுக்கு தீர்வு காண நடைபெற்று வருவதாகவும், திமுக தனது தொண்டர்களுக்கு, நிர்வாகிகளுக்கு முக்கியமான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin arranged an urgent meeting, reflection of k.k selvam destination 


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal