'Something went wrong ' ....உலகம் முழுவதும் முடங்கிய யூடூப்: லட்சக்கணக்கான பயனர்கள் அவதி...! - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், இன்று அதிகாலை முதல் பல்வேறு நாடுகளில் திடீரென தொழில்நுட்ப கோளாறால் செயலிழந்து பயனர்களை அவதியுறச் செய்தது. வழக்கமாக 24 மணி நேரமும் இயங்கும் இந்த தளம் திடீரென முடங்கியதால், கோடிக்கணக்கானோர் குழப்பமடைந்தனர்.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.40 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவிலும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் யூடியூப் சேவையை அணுக முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

செயலியை திறந்தவுடன் “Something went wrong” என்ற ஒரே செய்தி மட்டுமே திரையில் தோன்றியதால், பலர் ஏமாற்றமடைந்தனர்.புகார்களின் அடிப்படையில், 56% பயனர்கள் செயலியே இயங்கவில்லை என்றும், 17% பேர் இணையதளம் வழியாகவும் அணுக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், யூடியூப் டிவி சேவையிலும் ஒளிபரப்புத் தடைகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.இந்த பிரச்சினைக்கு காரணமாக, யூடியூப் பரிந்துரை (Recommendation) அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முகப்புப் பக்கம் மற்றும் தேடல் முடிவுகளில் வீடியோக்கள் தோன்றாத சிக்கல் உருவானது என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தற்போது சில பகுதிகளில் சேவை மெதுவாக சீராகத் தொடங்கியுள்ள போதிலும், முழுமையான தீர்வுக்காக தொழில்நுட்ப நிபுணர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Something went wrong YouTube down worldwide Millions users suffer


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->