பாம்பு உள்ளே போறவரைக்கும் என்னமா பண்ணீங்க.? வைரலாகும் வீடியோவை கண்டு அதிரும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


இணையத்தில் வெளியாகும் பல வீடியோக்கள் நமக்கு பயத்தை கொடுப்பதுண்டு. அவ்வப்போது உலகில் மிகவும் வினோத சம்பவங்கள் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தும். 

அந்த வகையில், தற்போது ஒரு பெண்ணின் காதில் பாம்பு நுழைந்து விட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது. இது சித்தரிக்கப்பட்டது என்று பலரும் அந்த வீடியோவிற்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்து உண்மை தன்மை என்னவென்று யாரும் உறுதிப்படுத்தவில்லை. 

குட்டியான பாம்பு காதுக்குள் புகுந்த நிலையில், அந்த பெண் யார், இந்த நிகழ்வு எங்கு நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லாமல் வீடியோ வைரலாகிறது. அந்த காதுக்குள் புகுந்த பாம்பை வெளியே எடுக்க மருத்துவர் நீண்ட நேரமாக போராடுகிறார். இது குறித்த வீடியோ வெளியான நிலையில், இது ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் கிராமத்தில் வேலை செய்துவிட்டு மிகுந்த தலைப்பில் வாசலில் படுத்து உறங்கி இருக்கிறார். அவர் வாயை பிளந்து குறட்டை விட்டு தூங்கிய போது நாலு அடி நீளம் கொண்ட ஒரு பாம்பு வாய் வழியாக புகுந்து வயிற்றுக்குள் சென்றது. 

மாட்டுக் கொட்டகையில் விளையாடிய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில்  குடும்பத்தினர்.! - Seithipunal

அந்த பாம்பு வயிற்றுக்குள் சென்று உரூண்டவுடன் என்னவோ வயிற்றுக்குள் உருளுகிறது என்று கண் விழித்த அவர் அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பரிசோதித்து விட்டு அவர் வயிற்றுக்குள் ஏதோ உருளுகிறது என்பதை மட்டும் கண்டறிந்து மயக்கம் மருந்து கொடுத்து உள்ளே இருந்ததை வாய் வழியாக வெளியே எடுக்க முயற்சித்தனர். 

ஒரு குழாயை பொருத்தி வெளியே எடுத்த போது அது விஷப்பாம்பு என்பது தெரியவந்தது. இப்படி பல வினோத நிகழ்வுகள் அடிக்கடி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake in women ear video viral


கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,
Seithipunal