ஆர்டர் பண்ணது VEG..வந்ததோ NON NEG..!- கொந்தளித்த சாக்ஷி அகர்வால்! - Seithipunal
Seithipunal


மாடல் அழகியாக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா உள்ளிட்ட பல படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும், சமீபத்தில் அதர்ய கதைகள், கெஸ்ட் மற்றும் தி நைட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது சிறுவயது நண்பரான நரனீத் மிஸ்ராவை கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சாக்ஷி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் சைவ உணவை ஆர்டர் செய்தும், அதற்கு பதிலாக சிக்கன் டெலிவரி ஆனது காணப்படுகிறது.

இதுகுறித்து சாக்ஷி தனது பதிவில்,"சுத்த சைவமான எனக்கு சிக்கன் வந்துள்ளது. என் மத உணர்வுகளை புண்படுத்தியதற்கு நன்றி"
என்று ஸ்விக்கி உணவகத்தை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒருபுறம், சைவ உணவை ஆர்டர் செய்தவருக்கு இப்படியான தவறு நடக்கக் கூடாது எனக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மறுபுறம், சாக்ஷி அகர்வாலின் பதிவு குறித்தும் சமூக வலைதளங்களில் சூடான விவாதம் கிளம்பியுள்ளது. தற்போது, சாக்ஷி அகர்வாலின் இந்த வீடியோ, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ordered VEG but received NON NEG An angry Sakshi Agarwal


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->