திருச்சந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல் - அச்சத்தில் பக்தர்கள்.!!
sea engulfed in thiruchenthur temple
தமிழ் கடவுல் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கம்.
இந்த நிலையில், அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூரில் கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருப்பினும், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
அவர்களுக்கு காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அமாவாசை மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
sea engulfed in thiruchenthur temple