டிவிட்டரை கலக்கும் ஒரு சொல் டிவிட்.. எந்த தலைவர் என்ன டிவிட் செய்தார்? - Seithipunal
Seithipunal


மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளங்களில் ஒன்று டிவிட்டர். டிவிட்டரில் அவ்வபோது சில விஷயங்கள் டிரெண்டாவது வழக்கம். அது போல நேற்று டிவிட்டரில் ஒற்றை சொல் டிவிட் டிரெண்டாகி வந்தது. அரசியல் தலைவர்கள், பிரலபங்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஒரு சொல்லை டிவிட் செய்தனர். 

ஒரு சொல் டிவிட் எங்கிருந்து ஆரம்பித்தது என தேடி பார்த்த போது அமெரிக்காவில் உள்ள ரயில் சேவை நிறுவனமான ஆம்ட்ராக், தனது அதிகார்வபூர்வ டிவிட்டர் பக்கத்தில் " Trains " என்ற வார்த்தையை டிவிட் செய்தது. இதனை கண்ட பலரும் ஒரு வார்த்தையில் டிவிட் செய்ய ஆரம்பித்தனர். அமெரிக்க அதிபர் பைடன் Democracy என டிவிட் செய்தார்.

உலகமெங்கும் ஒற்றை வார்த்தை டிவிட் பிரபலமான நிலையில், இந்திய பிரபலங்கள் பலரும் ஒற்றை வார்த்தையில்  டிவிட் செய்தனர். ICC மற்றும் சச்சின் கிரிக்கெட் என டிவிட் செய்தனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமூகநீதி எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிடம் எனவும் , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ்தேசியம்’ எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘தமிழன்’ எனவும் ட்வீட் செய்துள்ளார். 


அதிமுகவின் அதிகார்வ பூர்வ டிவிட்டர் பக்கம் எடப்பாடியார் எனவும்  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு எனவும் டிவிட் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து பலரும் ஒரு வார்த்தையில் டிவிட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one word Tweet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->