முடங்கிய வாட்சப்.. காதல் ஜோடிகள் கோரிக்கையை ஏற்று வாய்ஸ் முத்தத்தை பெற்று தந்த நெகிழ்ச்சி சம்பவம்.. !!  - Seithipunal
Seithipunal


இங்குள்ள காலத்தில் இணையதளம் என்பது நமக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. நாம் தினமும் நாம் பல மணி நேரத்தை இணையதளத்தில் செலவழித்து வருகிறோம். 

இணையதளத்தில் உள்ள செயலியான முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம், ஷேர்சேட் போன்ற பல செயலிகள் நமக்கு பெரும் உதவி செய்து வருகிறது. 

இதன் மூலமாக நாம் பலவற்றை தெரிந்து இருந்தாலும், இதில் உள்ள ஆபத்துக்கள் நாம் உபயோகம் செய்யும் அளவைப் பொறுத்து இருக்கிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொதுவாக நேர் எதிர் வினைகள் இருக்கும்.

இது இணையதளத்தில் பெருமளவில் இருக்கிறது. நாம் உபயோகம் செய்வதை பொறுத்து, நம்மிடம் பழகும் நபர்களை பொறுத்து அனைத்தும் மாறுபடும். மனிதர்களுக்கு காய்ச்சல் ஏற்படுவது போல சில நேரங்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களும் செயலிழப்பது தொடர்ந்து வருகிறது. 

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கூட முகனூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் பழுதாகி இணைய நெட்டிசன்களுக்கு விருந்தாகியது. இந்த நிலையில், தற்போது வாட்சப் செயலி செயலிழந்துள்ளது. 

இதன்படி தற்போது வாட்சப் மூலமாக வாய்ஸ் நோட்ஸ் மற்றும் புகைப்படம் பிறருக்கு அனுப்ப இயலவில்லை. இது தொடர்பாக இணைய நெட்டிசன்கள் ட்விட்டர் பக்கத்தில் #WhatsAppDown என்ற ஹாஷ்டேக்கில் இதனை பதிவு செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி கொண்டு வருகிறது.

சில மணி நேரங்களாக வாய்ஸ் மெசேஜ், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எதுவும் உபயோகப்படுத்த இயலவில்லை. இதனால் காதலர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். 

மேலும் வாட்ஸ்அப் குழுவில் காமெடி என்ற பெயரில் மீம்ஸ் போட்டு மொக்கை போடும் நபர்களும் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு விரைவில் வாட்ஸ் அப் செயலி பிரச்சனை சரி செய்யப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தற்போது அனைத்து பிரச்சனையும் சரி செய்யப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in whatsapp down return after short time


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal