புது கார் வாங்கிய ஜி.பி முத்து - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


புது கார் வாங்கிய ஜி.பி முத்து - வைரலாகும் புகைப்படம்.!

யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தனக்கென்று ரசிகர்களை கொண்டுள்ள இவர் பிக் பாஸ் ஆறாவது சீசன் போட்டியாளராக களமிறங்கினார். முதல் வாரத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இருப்பினும், அவர் தன்னுடைய குடும்பத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி சீசனில் இருந்து வெளியேறினார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

அஜித்தின் "துணிவு", சன்னி லியோன் உடன் "ஓ மை கோஸ்ட்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இதையடுத்து அவர் சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி கலக்கினார்.

இந்த நிலையில் ஜி.பி முத்து, புதிதாக கியா கேரன்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக பழைய காரை பயன்படுத்தி வந்த ஜி.பி.முத்து, பரம்பரையிலேயே புது கார் வாங்கிய முதல் ஆள் நான் தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், புது காரில் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக ரைடு சென்ற காட்சிகளையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்தக் காரின் விலை ரூ.12 முதல் 15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gp muthu buy new car


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->