பழைய கணக்கை தீர்த்த தாதா?... தல தோனியின் வளர்ச்சி.. வீழ்ச்சியில் இவர்....?..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவுடைய கிரிக்கெட் ரசிகர்களால் தாதா என்று அழைக்கப்படும் கங்குலிக்கும், தல என்று தாராள மனதுடன் பாசமாக அழைக்கப்படும் தோனிக்கும் பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. 

கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று சட்டையை கழற்றி தாதாவாக பந்தா காட்டிக்கொண்ட நபர் இந்திய அணியுடைய முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி.. 

இவர் கடந்த 2004 ஆம் இறுதியில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக அறிமுகம் செய்தவர் தோனி.. தோனியின் அளவற்ற வளர்ச்சியானது குறுகிய காலத்தில் உலகறிந்த நிலையில், ஒற்றை இலக்கு ரணனுடன் பெவிலியனுக்கு திரும்பியிருந்த கங்குலியை ஒரேயடியாக 2007 ஆம் வருடம் வீட்டிற்கும் அனுப்பியது. 

இதனையடுத்து தனது உழைப்பினால் பல கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்து, ஹெலிகாப்டர் ஷாட் மூலமாக உலகளவில் ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இதனைப்போன்று விக்கெட் கீப்பர், உலகக்கோப்பை சாம்பியன் என்று இந்திய அணிகளுக்கு தொடர்ந்து பல பெருமைகளையும் சேர்த்தார். 

கிரிக்கெட்டில் பல விதமான சாதனைகளை தொடர்ந்து படைத்தது கங்குலிக்கு மட்டும் பெரும் கசப்பாக இருந்தது. கங்குலி வெளியே சிரித்தாலும், தோனி விவகாரத்தில் பழைய கணக்கை நீக்கும் பொருட்டு கடந்த 2017 ஆம் வருடமே தோனி சிறந்த வீரர்தானா? என்ற கேள்வியை முன்வைத்தார்.  

இதனைதொடர்ந்து தனது பழையகணக்கை தீர்க்க நேரம் பார்த்து காத்துகொண்டு இருந்தாற்போலவே, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரின் பதவி கங்குலியை தேடி வந்ததும், உலகக்கோப்பை போட்டியில் தோனியின் இறுதி கண்ணீர் வெளியேறல் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

சிறந்த ஒரு கேப்டனாக உலகறிந்த வீரராக இருந்த தல தோனி தனக்கு அடுத்த நிலைமையில் உள்ள நபருக்கு தேவையானதை கற்றுக்கொடுத்து, முடிவெடுக்கும் திறனை வழங்கி சிறிது சிறிதாக ஒதுங்க துவங்கினர். தற்போது தோனி ஐ.பி.எல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. மேலும், தோனியின் பெயர் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்பதும் தற்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ganguli cold fight with thala dhoni


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->