முட்டிமோதிக் கொள்ளும் திமுகவின் முக்கிய புள்ளிகள்.! கலக்கத்தில் ஸ்டாலின்.!  
                                    
                                    
                                   DMK leaders fight 
 
                                 
                               
                                
                                      
                                            'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தில் மேற்கொண்ட பணிகளால் தான் அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக தனது திட்டத்தை உடனடியாக நிறுத்தி விட்டது. மேலும், இதற்காக சென்னை அண்ணா நகரில் இயங்கி வந்த ஐபேக் அலுவலகமும் மூடப்பட்டுவிட்டது. 
இந்நிலையில் கொரோமா வைரஸ் நெருக்கடி காலமாக இருந்த போதிலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்களை சீரியஸாக வகித்து வருகின்றார். 
ஆனால், இதன் காரணமாக சபரிசன்க்கும், பிரசாந்த் கிஷோருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
பிரசாந்த் கிஷோர் 234 தொகுதிகளையும் அலசி, ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார். அவர் இந்த முறை சீனியர்களுக்கு வாய்ப்பளிக்க தேவையில்லை என்ற முடிவை எடுத்து இருக்கின்றாராம். 
இருப்பினும், பிரசாத் கிஷோரின் சீனியரான சபரீசன் மூத்தவர்களின் அனுபவங்களும், அவர்களின் யுக்திகளும் தேர்தலுக்கு தேவை என்பதால் அவர்களை புறக்கணிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கிறார். 
பிரசாந்த் கிஷோர் வைத்திருக்கும் சீனியர்களின் இந்த பட்டியலில் சபரிசனுக்கு வேண்டிய சில மூத்தவர்கள் இருப்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று. 
இதனால்தான் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது திமுக வட்டாரங்களில் இது பெரும் சர்ச்சையை கிளப்பி இருப்பதாக கூறப்படுகிறது.