என்ன ராகவன் எம்.பி., எம்.எல்.ஏ னு நினைச்சோம், எம்.பி.4 ல வந்துடீங்க?.. கே.டி ராகவனை மீம்போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!
BJP KT Raghavan Sexual Video Issue Social Media Handlers Troll about MLA MP MP4
பாலியல் வீடியோ சர்ச்சையில் சிக்கிய கே.டி ராகவனை ட்விட்டரில் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த கே.டி ராகவன், பெண்ணிடம் ஆபாசமாக பேசி, ஆபாசமாக சில செய்கைகளை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கே.டி ராகவன் விலகிக்கொள்ளவே, இதற்கு மறுப்பு தெரிவித்து சட்டரீதியாக எதிர்கொள்வதாக ட்விட் பதிவு செய்தார். பாஜக தலைமை இது தொடர்பாக விசாரணை நடத்த குழு மைத்துள்ளது. வீடியோவை வெளியிடுவதற்கு முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்த மதன், கே.டி ராகவன் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதாக அவரது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் வெளியிட்ட பத்திரிக்கை செய்திக்குறிப்பில், மதன் சந்தித்து உண்மை. வீடியோவை பார்த்த பின்னர் நடவடிக்கை எடுப்பதாக கூறினேன். ஆனால், அவர் வீடியோவை காண்பிக்காமலேயே நடவடிக்கை எடுக்க கூறினார். ஆதாரம் இருந்தால் அதனை பார்த்தால் தான் உறுதிபட நடவடிக்கை எடுக்க முடியும். வாய்வழி பேச்சுக்களை வைத்து எப்படி குற்றசாட்டை உறுதி செய்வது? என்று தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து மதன் தெரிவிக்கையில், பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் உள்ள பலரும் அக்கட்சியில் உள்ள பெண்களிடம் இதுபோல அத்துமீறி இருக்கிறார்கள் என்றும், பலர் பெண்களை விடுதிக்கு அழைத்து சென்று பொறுப்புகளுக்காக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுபோன்ற பல கட்சியை சார்ந்த பிரமுகர்களும் விரைவில் சிக்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனால் அரசியல் வட்டாரம் அடுத்தடுத்து பரபரப்பாகி இருக்கிறது. இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? விசாரணை செய்வார்களா?. இல்லை அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுத்து ஆதாரங்கள் அழிக்கப்படுமா? உண்மை நிலைநாட்டப்படுமா? என்ற எண்ணற்ற பல கேள்விகள் இருக்கிறது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
BJP KT Raghavan Sexual Video Issue Social Media Handlers Troll about MLA MP MP4