அதிமுகவின் அவைத்தலைவராக தேர்வு செய்யப்படுகிறார் பொன்னையன்?.. அதிமுக வட்டாரத்தில் விறுவிறுப்பு?.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவுக்குள் பல பிரச்சனைகள் நடந்தது. சசிகலாவை எதிர்த்த ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்துகையில், அவருக்கு ஆதரவளித்த தலைவரின் முக்கியமானவராக கருதப்படுபவர் மதுசூதனன். இவர் அதிமுக அவைத்தலைவராக இருந்து வருகிறார். தற்போது, வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்குள்ளாக அதிமுக தலைமை அடுத்த அவைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் அதிமுகவில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக இருக்கும் முன்னாள் அமைச்சர் சி. பொன்னையனை தேர்வு செய்யலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்ற பொன்னையன் பல வருடங்கள் அமைச்சராக பதவியேற்று பணியாற்றி இருக்கிறார். போக்குவரத்து துறை, கல்வித்துறை, தொழிற்துறை அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றுள்ளார். இதனைப்போல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சர் உட்பட பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.

சசிகலாவின் எதிர்ப்பாளராக தற்போது இருந்து வரும் பொன்னையன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் என இருவேறு பொறுப்புகளை கொண்டுள்ள பொன்னையன், அதிமுக அவை தலைவராக நியமனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸின் வீரியத்தை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Ponnaiyan May be Select as Madusudanan Posting 21 July 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->