பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் நயன்தாராவின் குட்டி கிருஷ்ணர்கள் - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் நயன்தாராவின் குட்டி கிருஷ்ணர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா சமீபத்தில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். அதில் முதல் போஸ்டாக தனது இரு குழந்தைகளுடன் செம மாஸாக ஜெயிலர் பட பாடலுடன் ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார். 

அதன் பின்னர், அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் தான் இணைந்து நடித்த ஜவான் படத்தின் தமிழ் மற்றும் இந்தி ட்ரெய்லர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு புரோமொட் செய்திருந்தார். 

இதைத்தொடர்ந்து, நயன்தாரா ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது இரு குழந்தைகளும் வாழை இலையில் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். 

இந்த நிலையில், நயன்தாரா தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

அதனுடன், எங்கள் வீட்டு கிருஷ்ணன்கள். அத்தகைய ஒரு பாக்கியம் #கிருஷ்ணஜெயந்தி மிக அழகான, ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்களுடன்! என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor nayanthara share childrens post in instagram page


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal