கொட்டும் மழையிலும் ஜோராக நடந்த திருமணம்.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


திருமணங்கள் என்றாலே கொண்டாட்டத்திற்கு குதூகலத்திற்கும் பஞ்சம் இருக்காது. இதன் காரணமாகவே பெரும்பாலான திருமணங்கள் மழை இல்லாத கோடை காலங்களில் நடத்தப்படுகின்றன.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழி. அந்த சொர்க்கமே திறந்து மண்ணில் விழுந்தது போல ஒரு திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. அந்த திருமணம் தொடர்பான வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பொதுவாகவே திருமணங்களை கோடை காலத்தில் தான் நடத்துவார்கள். திருமண கொண்டாட்டங்களின் போது மழை பெய்து விட்டால் அசௌகரியமாக இருக்கும் என்பதால் பெரும்பாலான திருமணங்கள் கோடை விடுமுறைகளான ஏப்ரல், மே மாதங்களில் தான் நடைபெறும். ஆனால் அந்த மலையிலும் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து இருக்கிறது ஒரு ஜோடி.

திருமணத்திற்கு அனைவரும் தயாராக இருந்த நிலையில் திடீரென கோடை மழை கொட்டித் தீர்க்கத் தொடங்கியது. எனினும் மணமக்கள் இருவரும் பதட்டப்படாமல் மழையில் நனைந்தபடியே மணமேடைக்கு வந்து தாலி கட்டினர். மேலும் திருமணத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வானவேடிக்கைகள் மற்றும் நடன கலைஞர்கள் யாரும் தங்களது பணிகளை நிறுத்தாமல் கொட்டும் மழையிலும் கோலாகலமான வானவேடிக்கை மற்றும் நடனத்துடன் அந்தத் திருமணம் இனிதே நடந்தேறியது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A video of a celebratory wedding in the pouring rain has gone viral on social media


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->