தண்ணீர் பாட்டிலை உணவு என எண்ணி விழுங்கிய பாம்பு..! பரிதவித்த பரிதாப வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்டத்தில் பல விதமான பொருட்கள் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பொருள்களில் சில அன்றாடம் நாம் தொடர்ந்து உபயோகம் செய்து வரும் வேளையில்., குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற பொருள் பிளாஸ்டிக். 

இந்த பிளாஸ்டிக்கின் காரணமாக ஏற்படும் பேரழிவுகள் குறித்து நாம் பல விதமான விஷயங்களை தெரிந்து வைத்திருப்போம். இருப்பினும் நாம் பிளாஸ்டிக் பொருட்கள் பழக்கத்தை குறைக்காது தொடர்ந்து கொண்டு வருவது பெரும் சோகமே.. 

தற்போது மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கின் காரணமாக நம்மிடம் இருந்து பிளாஸ்டிக் பொருள் பிரிந்து சென்றாலும்., மற்றொரு நபரிடம் மீண்டும் பயன்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில்., எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கூட விலங்குகளின் உடல்களில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கவர்கள் எடுக்கப்பட்டது.

இதனால் மனிதர்களை விட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவை கடுமையான அளவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில்., தற்போது பாம்பு பிளாஸ்டிக் தண்ணீர் கேனை சாப்பிட்டுவிட்டு பின்னர் நீண்ட முயற்சிக்கு பின்னர் வெளியே தள்ளுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a snake eat water can and vomit after long time


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal