கள்ளக்காதலுக்காக கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி... ரகசியம் தெரிந்த 4 வயது மகனும் பலி...!. - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில், கணவனை கொடூரமாக கொலை செய்த பெண், அந்த சம்பவத்தை நேரில் பார்த்த தனது 4 வயது மகனையும் இரக்கமின்றி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்பனாவாரா பகுதியை சேர்ந்தவர் அபிநந்தன், 34. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி ஹரிணி. இவர்களுக்கு யதுவீர் என்ற 4 வயது மகன் இருந்தான்.இந்நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக ஹரிணிக்கு வினய் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் நெருக்கமாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அபிநந்தனுக்கு தெரியவந்ததை தொடர்ந்து, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.வினய்யுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ஹரிணி, கணவன் உயிருடன் இருக்கும் வரை தங்களது திட்டம் நிறைவேறாது என கருதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஹரிணியும் வினய்யும் சேர்ந்து அபிநந்தனை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது.அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அபிநந்தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, இருவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

அவரது தலையை சுவரில் பலமுறை மோதியதுடன், கழுத்தையும் நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அபிநந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கொடூர சம்பவம் நடந்தபோது அருகில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் யதுவீர் சத்தம் கேட்டு கண்விழித்துள்ளான்.

தனது தந்தை தாக்கப்பட்டு உயிரிழப்பதை நேரில் பார்த்த அந்த பச்சிளம் குழந்தை அதிர்ச்சியில் உறைந்ததாக கூறப்படுகிறது.தந்தைக்கு நேர்ந்த கொடூரத்தை மகன் பார்த்துவிட்டதால், நடந்த சம்பவத்தை வெளியே கூறிவிடுவான் என ஹரிணி அஞ்சியதாக தெரிகிறது. இதையடுத்து, பெற்ற தாய் என்ற பாசத்தையும் மறந்து, குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மூச்சுத்திணறிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.பின்னர், கொலைக்கான தடயங்களை மறைக்க இருவரும் முயன்றதாக தெரிகிறது. வீட்டில் காணப்பட்ட ரத்தக்கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்ததுடன், அபிநந்தனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் மாற்றி துவைத்ததாக கூறப்படுகிறது.

கொலை சம்பவத்தை மறைப்பதற்காக, கணவனும் மகனும் மர்மமான முறையில் உயிரிழந்ததாக உறவினர்களிடம் தெரிவித்து ஹரிணி நாடகமாடியதாக கூறப்படுகிறது. குழந்தையின் மரணம் இயற்கையான முறையில் அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டது போன்று காட்டவும் முயன்றதாக தெரிகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிக்பனாவாரா காவலர்கள், அபிநந்தன் மற்றும் சிறுவன் யதுவீரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில் இருவரின் மரணத்திலும் சந்தேகம் ஏற்பட்டதால், ஹரிணியின் நடவடிக்கைகளையும் காவலர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், அபிநந்தன் தாக்கப்பட்டதாலும், சிறுவன் மூச்சுத்திணறியதாலும் உயிரிழந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹரிணியிடம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், வினய்யுடன் சேர்ந்து கணவனையும், சம்பவத்தை நேரில் பார்த்த தனது மகனையும் கொன்றதாக ஹரிணி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஹரிணியை காவலர்கள் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த வினய்யையும் காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர். கனகபுரா அருகே உள்ள ஹெரோஹள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் மேற்கொண்ட காவலர்கள், நேற்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து வினய்யை கைது செய்தனர்.

கள்ளக்காதலுக்காக கணவனையும், கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த பச்சிளம் மகனையும் தாய் கொலை செய்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife who killed her husband for cheating 4 year old son who knew secret also dies


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->