சமூக வலைத்தளக் காதலால் விபரீதம்: உணவகம் அருகே இளம்பெண் மீது சாணத்தைக் கரைத்து ஊற்றிய கும்பலால் காரைக்குடியில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் தனது கணவரைப் பிரிந்ததாகக் கருதிய இளம்பெண் மீது, ஆத்திரமடைந்த மனைவி தனது சகோதரி மற்றும் தோழியுடன் சேர்ந்து சாணக் கரைசலை ஊற்றிய சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (30). சமூக வலைத்தளத்தில் பிரபலமாக அறியப்படும் இவருக்கும், கல்லல் அருகே உள்ள ஏழுமாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவியரசன் (35) என்பவருக்கும் இணையவழி அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் கவியரசனுக்குச் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மனைவி அபிநயாவைப் பிரிந்து அந்த இளம்பெண்ணுடன் கவியரசன் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.இதனை அறிந்த அபிநயா, தனது கணவர் தன்னைப் பிரிந்ததற்கு அந்த இளம்பெண்தான் காரணம் எனக் கருதி அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.இந்தச் சூழலில், சம்பவத்தன்று அபிநயா தனது சகோதரி அருணாதேவி (27), தோழி பிரியா (30) ஆகியோருடன் மொபெட்டில் காரைக்குடி நூறடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள உணவகம் ஒன்றுக்குள் அந்த இளம்பெண் செல்வதைக் கண்ட மூவரும் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆரம்பத்தில் வாய்த்தகராறாகத் தொடங்கிய மோதல், பின்னர் கைகலப்பாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது அபிநயா, அருணாதேவி, பிரியா ஆகிய மூவரும் தங்களுடன் கொண்டு வந்த துடைப்பத்தால் அந்த இளம்பெண்ணைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

தொடர்ந்து, சாணத்தைக் கரைத்து அந்த இளம்பெண் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மாணிக்கம் விசாரணை மேற்கொண்டார்.

புகாரைத் தொடர்ந்து அபிநயா, அவரது சகோதரி அருணாதேவி, தோழி பிரியா ஆகிய மூவர் மீதும் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கவியரசனை நேரில் வரவழைத்த காவலர்கள், சமூக வலைத்தளத்தின் வாயிலாக அவர் வேறு பெண்களுடனும் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சினை காரணமாக இளம்பெண் தாக்கப்பட்டு, அவர் மீது சாணக் கரைசல் ஊற்றப்பட்டதாக எழுந்துள்ள புகார் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social media romance turns tragic mob poured dung young woman near restaurant causing Karaikudi


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->