ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்த தம்பதி.! சேர்ந்த நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்.!  - Seithipunal
Seithipunal


சேரன்மகாதேவியில் இருக்கும் மேலகண்டவளவு பகுதியை சேர்ந்த பாரதிராஜா என்பவர் நிர்மலா (30) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக நிர்மலா தன்னுடைய கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இரு தரப்பு மூத்தவர்களும், நேற்று முன்தினம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று பாரதிராஜாவும், நிர்மலாவும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு நாள் மட்டுமே சந்தோ‌ஷமாக வசித்த அவர்களுக்கு இடையில், இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாரதி ராஜா தன்னுடைய மனைவியை அவதூறாக பேசி சரமாரி அடித்து உதைத்துள்ளார். ஆத்திரத்தில் அவரை வேகமாக கீழே தள்ளி விட்டுள்ளார்.

இதனால், விழுந்த நிர்மலாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in thuthukudi seranmadevi


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal