கன்னியாகுமரி | மத போதகரின் வெளிநாட்டுகாதல் மனைவியை சிறை பிடித்த மக்கள்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், பருத்தி விளையை சேர்ந்த திருமணம் செய்து கொள்ளாத மத போதகருக்கு (வயது 62) சில வருடங்களுக்கு முன், இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின் அது காதலாகி, கடந்த டிசம்பர் அந்த பெண்ணை நாகர்கோவில் பகுதி தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார் அந்த மத போதகர்.

வயதை மீறிய இவரின் திருமணத்திற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த நேற்றிரவு உணவு வாங்குவதற்காக மத போதகர் வெளியே செல்லவே, அந்நேரம் வீட்டில் தனியாக இருந்த இந்தோனேசியா பெண்ணை பூட்டி சிறை வைத்தனர்.

மேலும், மத போதகர் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தவே, அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என போலீசார் எச்சரித்தனர். 

ஒருவழியாக உறவினர்கள் வீட்டின் பூட்டை பிரச்சனையை சுமுகமாக பேசிமுடிக்க சம்மத்தினர். இதனையடுத்து போலீசார் இருதரப்பினரையும் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டு சென்றனர். மேலும் மத போதகரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கிவிட்டு சென்றனர்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KUMARI MATHA POTHAKAR LOVE MARRIAGE ISSUE


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal