ஓசூர் கள்ளகாதலர்கள் விவகாரம்.! அக்கம்பக்கத்தினர் இருக்கும் போதே அரங்கேற்றிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் பிருந்தாவன நகரை சேர்ந்த பூர்ணிமா என்பவருக்கு (வயது 36) திருமணம் ஆகி கணவர் இருக்கின்றார். இந்த நிலையில், பிருந்தாவன் நகரைச் சேர்ந்த அனிபுதீன் (வயது 25) என்பவருடன் இவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவ்வாறு இருக்கையில், இந்த கள்ளகாதலுக்குள் இருவருக்குமிடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரும் சம்பவத்தன்று சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பிரச்னை முற்றியது. 

fire, seithipunal

எனவே, கள்ளகாதலர்கள் இருவரும் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து அவர்களது உடலில் ஊற்றி தானே தீ வைத்து கொண்டுள்ளனர். தீ பற்றியதும் வலி தாங்காமல் இருவரும் அலறி துடிக்க அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீது அம்புலன்ஸ் உதவி கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருல் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hosur kallakadhal suicide


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal