பீகாரின் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாக்கூர்: தமிழில் பாடி அசத்தும் வீடியோ!
Youngest MLA Maithili Thakurs Tamil Melody Goes Viral
பீகார் மாநிலத்தின் தர்பங்கா மாவட்டத்திலுள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரபல நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர், 25 வயதிலேயே பீகாரின் இளம் எம்.எல்.ஏ-வாகத் தேர்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். சிறுவயது முதலே இசை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் அவர் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற ஊடக முகமாகத் திகழ்ந்து வருகிறார்.
தமிழின் மீது தீராத ஆர்வம்:
வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மைதிலி தாக்கூர் தமிழின் மீது கொண்டுள்ள பற்று வியக்கத்தக்கது. ஏற்கனவே அருணகிரிநாதரின் "முத்தையருள்..." எனும் கடினமான திருப்புகழ் பாடலைத் துல்லியமாகப் பாடி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியவர் இவர்.
கேரளாவில் தமிழ் முழக்கம்:
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மைதிலி தாக்கூர் முருகன் பாடலைத் தமிழில் பாடி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மிகவும் கடினமான தமிழ் சந்தங்களைக் கொண்ட பாடல்களைத் துல்லியமான உச்சரிப்புடன் அவர் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு வடமாநிலப் பாடகி, தமிழின் நுணுக்கமான உச்சரிப்புகளை இவ்வளவு அழகாகக் கையாள்வது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
கலைக்கு மொழி தடையில்லை: பாடகியாகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று பீகாரின் இளம் மக்கள் பிரதிநிதியாகத் தனது புதிய அரசியல் பயணத்தை மைதிலி தாக்கூர் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார்.
English Summary
Youngest MLA Maithili Thakurs Tamil Melody Goes Viral