ஆட்சியில் பங்கு... உரிமையை மீண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது: டெல்லி விரைந்தார் மாணிக்கம் தாகூர் எம்.பி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையே 'ஆட்சியில் பங்கு' குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் குரலை டெல்லி மேலிடத்திற்குக் கொண்டு செல்ல இன்று புறப்பட்டுள்ளார்.

தனது எக்ஸ் (X) தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "இந்தப் பயணம் தமக்காக அல்ல, காங்கிரஸ் இயக்கத்தைக் காக்கும் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதற்காக என அவர் தெரிவித்துள்ளார்.

மேலிடச் சந்திப்பு: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் (மல்லிகார்ஜுன கார்கே) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் (ராகுல் காந்தி) ஆகியோரைச் சந்தித்துத் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை விளக்கவுள்ளார்.

உரிமைக் குரல்: "மதவெறிக் கும்பலைத் தோற்கடிக்க வேண்டும்; அதே வேளையில், நம் உரிமையை மீண்டும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது" என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

"நட்புக்குத் தோள் கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!"

இந்த வாசகத்தின் மூலம், திமுக-வுடனான கூட்டணியை மதிக்கும் அதே வேளையில், வரவிருக்கும் 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் கௌரவம் மற்றும் அதிகாரப் பங்கீடு ஆகியவற்றில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wont Give Up Our Rights Manickam Tagore MP Heads to Delhi to Represent Cadre Sentiments


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->