எடப்பாடி தொகுதியில் மீண்டும் கே.பழனிசாமி சாதிப்பாரா..? 2026-இல் வெற்றி தொடருமா..?
Will K Palaniswami triumph once again in the Edappadi constituency
வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன.
இதில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவரது ஊரின் பெயரிலையே அதிகமாக அறிபடுகிறார்.
இவர், 1974-இல் அதிமுகவின் கிளைச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். 1989 தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். 1998-இல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017-இல் முதலமைச்சராகப் பதவியேற்றார். அந்த காலகட்டம் கட்சிக்கும் ஆட்சிக்கும் கடும் நெருக்கடியானது. ஆனாலும், தனது அரசியல் முதிர்ச்சியால் நான்கு ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நடத்திக் முடித்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியது.
எடப்பாடி தொகுதி:
இந்த தொகுதியில், வாக்காளர்கள் எண்ணிக்கை 2,74,054 ஆகும். வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அதற்கு அடுத்தப்படியாக கொங்கு வேளாளர், முதலியார் சமூகத்தினரும் உள்ளனர். கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அதிமுக 07 முறையும், பாமக 03 முறையும், திமுக 02 முறையும், காங்கிரஸ் 02 முறையும், வெற்றி பெற்றுள்ளன. இந்த எடப்பாடி தொகுதியில் சமூக வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
1989 மற்றும் 1991 தேர்தல்களில் வெற்றி பெற்றாலும், அதன்பிறகு பழனிசாமியின் அரசியல் பயணம் சோதனைகள் நிறைந்ததாக இருந்தது. 1996 தேர்தலில் தோல்வியடைந்தார். 2001-இல் தொகுதி பாமக-விற்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியிடவில்லை. 2006 தேர்தலில் திமுக + பாமக கூட்டணி அமைந்த போது, அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பழனிசாமி 6,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதற்கிடையே 1999 மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களிலும் அவர் தோல்வியைத் தழுவினார்.
சுமார் 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 2011-இல் எடப்பாடி தொகுதியிலிருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 2016-இல் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக உயர்ந்தவர், 2021 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுத் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்த சூழலில், எடப்பாடி தொகுதியில் இதுவரை 97 முறை களம் கண்டுள்ளார். அதில்0 5 முறை வெற்றியம் பெற்றுள்ளார். அவரது அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால், வன்னியர் சமூக வாக்குகள் தீவிரமாக ஒருங்கிணைக்கப்பட்ட காலங்களில் மட்டுமே (1996, 2006) அவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
ஆனால், கடந்த 2011-இல் மீண்டும் அரசியல் களத்தைச் சாதகமாக்கி, இன்று வரை எடப்பாடி தொகுதியைத் தனது அசைக்க முடியாத 'இரும்புக்கோட்டையாக' மாற்றியுள்ளார். ஒரு தொகுதியின் பெயரையே தனது அடையாளமாக மாற்றிக்கொண்ட பழனிசாமியின் இந்த அரை நூற்றாண்டு காலச் சாதனையை, வரவிருக்கும் 2026 தேர்தல் களம் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பை தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
English Summary
Will K Palaniswami triumph once again in the Edappadi constituency