நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வாக்களிக்கதாதது ஏன்.. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது.

பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாக்களித்தனர்.

இந்த நிலையில் வாக்குப் பதிவு நாளான நேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்களித்தனர். ஆனால், நேற்றைய தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி வாக்களிக்கவில்லை.

இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் வாக்களித்தார்.

தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அவருக்கான வாக்குரிமை தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ளது. மேலும், இக்கிராமம் ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்டதாகும். இதனால் நேற்றைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாக்களிக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why edapadi pazhanisamy don't not vote in urban local election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->