'தமிழகம் முழுவதும் விஜய்யின் கோட்டையாக மாறும்'...! - தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் அமைச்சர் ஆனந்த் கணிப்பு
whole of Tamil Nadu will become Vijays fortress Minister Anand prediction Dharapuram by election field
தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொகுதியில் நிலவும் 5 முனை போட்டி தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது. வருகிற 6-ந் தேதி செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

இதையொட்டி, தாராபுரத்தில் அமைச்சர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொகுதியில் நிலவும் 5 முனை போட்டி, ஒவ்வொரு கட்சிக்கும் சாதகமான சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக, 5 முனை போட்டி நிலவுவதால் த.வெ.க.வின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்று அவரிடம் கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார்.
போட்டி எத்தனை முனைகளாக இருந்தாலும், த.வெ.க. மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் ஆனந்த் கூறுகையில், வருங்காலத்தில் தமிழகம் முழுவதும் த.வெ.க.வின் செல்வாக்கு மேலும் வலுப்பெறும் என்றும், தமிழகம் முழுவதும் த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய்யின் அரசியல் கோட்டையாக மாறும் என்றும் தெரிவித்தார்.
தாராபுரம் தொகுதியில் 5 முனை போட்டி நிலவும் நிலையில், த.வெ.க.வின் வெற்றி குறித்து அமைச்சர் ஆனந்த் வெளிப்படுத்தியுள்ள இந்த உறுதியான நம்பிக்கை, தேர்தல் களத்தில் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
English Summary
whole of Tamil Nadu will become Vijays fortress Minister Anand prediction Dharapuram by election field