'என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்...ஆனால் பெண்களைப் பற்றி பேசினால்...! - தாராபுரத்தில் ஆவேசப்பட்ட விஜய் - Seithipunal
Seithipunal


தாராபுரம் தேர்தல் களத்தில் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த விஜய், பெண்களை இழிவுபடுத்திப் பேசுபவர்களுக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்தார். “என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்; ஆனால் பெண்களை பற்றி பேசினால் சும்மா இருக்க மாட்டேன்” என்று அவர் ஆவேசமாக தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித்தொகுதிக்கு நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.இதையொட்டி, த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து விஜய் இன்று தாராபுரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் நின்றபடி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அவர், வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது விஜய் பேசியதாவது,"ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லிவிட்டு செல்கிறேன். நான் ஏற்கனவே பேசும்போது ஒரு விஷயத்தை தெளிவாக கூறியிருந்தேன். தி.மு.க.வுக்கும், மற்ற சிலருக்கும் வாக்களித்தால், பெண்களை இழிவாகவும் அவதூறாகவும் பேசுபவர்களை நாம் ஆதரிப்பது போன்ற நிலை ஏற்படும் என்று கூறியிருந்தேன்.

நமது வீட்டு பெண்கள், நமது அம்மா, அக்கா, தங்கைகள் குறித்து அவதூறாக பேசுபவர்களுக்கு நாம் ஆதரவாக இருப்பது போன்ற சூழல் உருவாகிவிடும் என்றுதான் நான் அன்று குறிப்பிட்டேன். அந்த கருத்தை வெறும் தேர்தல் வாக்குகளுக்காக நான் சொல்லவில்லை.நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் தாராபுரத்திற்கு வந்து என்ன பேசிவிட்டு சென்றார் என்பதை அனைவரும் கவனித்திருப்பீர்கள்.

தந்தையும் மகனும் தாராபுரத்திற்கு வந்து தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக சத்தியபாமா குறித்து அவர் பேசிய விதம் வேதனை அளிக்கும் வகையில் இருந்தது. அவர் பயன்படுத்திய வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருந்தது.

அவர் மட்டும்தான் இவ்வாறு பேசுகிறாரா என்றால் இல்லை. அவரால் வளர்க்கப்பட்டவர்கள் என்று நான் கருதுபவர்களும் என்னைப் பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்து செல்கிறார்கள்.என்னைப் பற்றி அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதையெல்லாம் நான் பொறுத்துக்கொள்கிறேன்.

ஆனால், நமது சகோதரியைப் பற்றியோ, நமது வீட்டில் இருக்கும் அம்மா, அக்கா, தங்கைகளைப் பற்றியோ அவதூறாக பேசினால் மட்டும் நான் அமைதியாக இருக்க மாட்டேன்.இது தேர்தலுக்காக மட்டும் நான் சொல்லும் வார்த்தை அல்ல. எப்போது வேண்டுமானாலும் மக்களை சந்திக்க நான் வருவேன். மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.இவ்வாறு விஜய் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Talk about me whatever you want but if you talk about women Vijay gets angry Dharapuram


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->