யார் இந்த சர்ச்சை மன்னன்? எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு – நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் அறிவிப்பு?
Who is this controversial king HRaja likely to be appointed as Governor Announcement after the Parliament session ends
நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் மறைவதும், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதுமாக, இரண்டு மாநிலங்களிலும் ஆளுநர் பதவி காலியாகியுள்ளது. இதனால் புதிய ஆளுநரை நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை குறிவைத்து வரும் பாஜக, இந்த முறை தமிழகம் சார்ந்த மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் மூத்த தலைவருமான எச். ராஜாவை நாகாலாந்து அல்லது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய அமைச்சராகவும், தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பல்வேறு மாநிலங்களில் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக பாஜக தலைவர்களுக்கும் தேசிய அரசியலில் இடம் தருகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்க விரும்புகிறது பாஜக.
கடந்த முறைதான் எச். ராஜா ஆளுநராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டபோதும், சில காரணங்களால் அது நடக்கவில்லை. ஆனால் தற்போது இரண்டு மாநிலங்களிலும் ஆளுநர் பதவி காலியாகியுள்ளதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், இது தொடர்பான ஆலோசனைகள் மத்திய பாஜக தலைமையகத்தில் நிறைவடைந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Who is this controversial king HRaja likely to be appointed as Governor Announcement after the Parliament session ends