அரசியல் களத்தில் பிரேமலதா யார்... ஜானகியா? ஜெயலலிதாவா? - Seithipunal
Seithipunal


விஜயகாந்த் மறைந்த நிலையில், அவரது மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் கட்சியை எவ்வாறு வழி நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும் உச்சத்தில் இருந்த போதே 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கிய விஜயகாந்த், 2006ஆம் ஆண்டு தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று மூன்றாவது சக்தியாக உருவெடுத்தார்.

அந்த  தேர்தலில், தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார் என்றாலும், ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. இது தமிழக அரசியல் களத்தில் ஒரு மூன்றாவது சக்தியாக விஜயகாந்த் உருவெடுப்பதைச் சுட்டிக்காட்டியது. விஜயகாந்தை பொறுத்தவரை அதிமுக, திமுக இரண்டு கட்சியையும் சம தொலைவில் வைத்தே  அரசியல் செய்தார்.  
அதோடு, தெய்வத்தோடும் மக்களோடு மட்டும்தான்  கூட்டணி என்று கூறி பிரச்சாரத்தில் மக்களை சந்தித்தார்.  இது மக்களிடம் ஓரளவு எடு படவும் செய்தது. அதற்கு  பலனாக  2006ஆம் ஆண்டுத் தேர்தலில் வலுவாக இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராகத் தனித்துப் போட்டியிட்டு தேமுதிக 8.38 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக முன்னேறியது.


2011ஆம் ஆண்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 எம்.எல்.ஏக்களைப் பெற்று, தி.மு.கவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தும் துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரனும் அமர்ந்தார்கள்.

ஆனால், ஒரு கட்டத்தில் சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் கடுமையாக மோதிக்கொண்டனர். 
மோதலின் விளைவை வெகு சீக்கிரமாகவே விஜயகாந்த் உணரத்   தொடங்கினார். அவரது கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து தேமுதிகவை ஆட்டம் காண செய்தார் ஜெயலலிதா. 
ஒரு கட்டத்தில் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாததால், தீவிர அரசியலில் அவரால் ஈடுபட  முடியவில்லை. அதனால் சந்தித்த கடைசி தேர்தல் அனைத்திலும் வாக்கு சதவீதம் 2 சதவீதத்திற்கும் கீழே  சரிந்து  நோட்டாவுடனே போட்டி போட்டனர். 
1987ல் எம்ஜியார் மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்து ஜானகியும், ஜெயலலிதாவும் தனித்தனியே 1989 சட்டமன்றத் தேர்தலாய் சந்தித்தது,  13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, மு. கருணாநிதி மூன்றாவது முறை முதலமைச்சராக பதவியேற்க வழிவகை செய்தது.

அஇஅதிமுகவின்  படுதோல்வியால், ஜானகி அரசியலில் தனக்கு பலம் இல்லை எனபதை  உணர்ந்து ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அதன் பிறகு ஜெயலலிதா தலைமையில் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக விளங்கியது வரலாறு. 

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்  மறைந்த நிலையில், பிரேமலதாவுக்கு மக்களிடமும், தொண்டர்களிடமும் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். அதற்கு ஒரே வழி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டு கடந்த தேர்தலில்  பெற்ற வாக்கு  சதவீதத்தை  விட அதிகமாக பெற்றால் தான் தொண்டர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையை பெற முடியும். 

தேமுதிக கட்சிக்கென்று பெரிதாக கொள்கைகள் கிடையாது. விஜயகாந்த் என்ற நடிகருக்கு இருந்த ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளே  கட்சியில் பெரும்பாலான பதவிகளில் இருந்தனர்.  எம்ஜியாருக்கு பிறகு அதிமுகவை வழி நடத்திய ஜெயலலிதா,  தைரியமானவர், திறமையானவர், முடிவெடுப்பதில் வல்லவர் என்ற பெயரை மக்கள் மத்தியில் சம்பாதித்தார். 

விஜயகாந்த் மறைந்த நிலையில், ஜெயலலிதாவை போல் பெயர் எடுப்பாரா.. அல்லது ஜானகி போல் சறுக்குவாரா... என்பதை அவரின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தான் முடிவு செய்யும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who is premalatha vijayakanth Next Janki or Jayalalitha


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->